×

விருதுநகரில் தேர்தல் விழிப்புணர்வு

 

விருதுநகர், ஜன. 8: விருதுநகர் அருகே நோபிள் கலை அறிவியல் கல்லூரியில் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலெக்டர் பேசுகையில், தேர்தல் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் அனைத்து தரப்பு வாக்காளர்களும் பங்களிக்க வேண்டுமென்பதற்காக 2024 நாடாளுமன்ற பொதுத் தேர்தல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே நிகழ்ச்சியின் நோக்கம்.

இந்திய தேர்தல் ஆணையம் மூலம் தொடர்ச்சியாக இளம் வாக்காளர்களுக்கு முதன்முறையாக வாக்களிக்கக்கூடிய வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, வாக்களிப்பதில் இருக்க கூடிய பொறுப்புகள், உரிமைகள் குறித்தும் வாக்குகளுக்கு வேட்பாளர் தன்னுடைய பணப்பலன்களை
வைத்து ஓட்டு பெறுவது ஜனநாயகத்திற்கு புறம்பான ஒரு செயல்.

அதை புறக்கணித்து நேர்மையாக வாக்களிக்க வேண்டும் என்பது பற்றி பல்வேறு நிகழ்ச்சி மூலம் ஒவ்வொரு கல்லூரிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தேர்தல் களத்தில் அனைவரும் எவ்வாறு வாக்களிக்க வேண்டும். வேட்பாளர்கள் பொதுமக்களுக்கு தவறான வழிமுறைகளை கையாண்டு
வாக்களிக்க கற்றுக்கொடுப்பதை தவிர்த்து அதில் இருந்து நேர்மையான தேர்தல் ஜனநாயகத்தின் முக்கியத்துவத்தை, ஆற்றல் வாய்ந்த ஜனநாயகமாக மாற வேண்டுமென்றார்.

The post விருதுநகரில் தேர்தல் விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Noble College of Arts and Sciences ,Collector ,Jayaseelan ,Parliament ,
× RELATED சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்ததே...